தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றியுள்ள மாணவியர் உயர் கல்வி பெற 98 உயர் கல்வி துறை, நாள் 17.06.2013 நாளிட்ட அரசனைபடி இக் கல்லூரி 2013 ல் தொடங்கப்பட்டது 01.07.2013 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியரால் சேர்க்கை விண்ணப்பம் வழங்கியும் 13.09.2013 அன்று மாண்பு மிகு தமிழக முதல்வரால் காணொளி மூலம் காரிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்பெறு 2013-14 கல்வியாண்டு முதல் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்சி. கணிதம் ஆகிய 5 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன.
07.03.2017 அன்று மாண்புமிகு தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் முன்னிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் காரிமங்கலத்தில் புதிய கட்டிடம் திறக்கப்பெற்று செயல்படத் தொடங்கியது .
சென்னை-6 கல்லூரிகள் இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.27289/க்யூ 3/2016, நாள் 09.08.2017 உடன் பெறப்பெற்ற அரசனை (நிலை) எண் 221 உயர் கல்வி துறை நாள் 04.08.2017 ன் படி, சட்ட பேரவை விதி 110 ன் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின் படி இக் கல்லூரியில் 2017-2018 ஆண்டில் இளநிலை பாடப்பிரிவுகள் பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி. வேதியல், பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. காற்சி தொடர்பியல் மற்றும் பி.பி.ஏ. ஆகிய 5 பட பிரிவுகளும் முதுகலை பாடப்பிரிவுகளில் எம் .ஏ.தமிழ், எம் .ஏ.ஆங்கிலம், எம் .எஸ்.சி. கணிதம், எம் .எஸ்.சி. கணினி அறிவியல், எம் .காம்.ஆகிய 5 பாடப்பிரிவுகளும், ஆராட்சி படிப்பில் எம் .பில் தமிழ், எம் .பில் ஆங்கிலம் ஆகிய புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பெற்றன.
சென்னை-6 கல்லூரிகள் கல்வி இயக்குனர் அவர்களின் கடித ந.எண்.13517/க்யூ3/2018 நாள் : 25.06.2018 உடன் பெறப் பட்ட அரசனை (நிலை) எண்.120 உயர்கல்வி (G1) துறை நாள் 22.06.2018 ன் படி சட்ட பேரவை விதி 110 ன் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி கல்லூரியில் எம்.சி.ஏ., எம்.எஸ்.சி. இயற்பியல், எம்.எஸ்.சி. வேதியல், எம்.பில். கணிதவியல், எம்.பில். வணிகவியல், எம்.பில். கணினி அறிவியல், ஆகிய புதிய பாட பிரிவுகள் தொடங்கப்பட்டன